திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவை முன்னிட்டு 5 கிலோ மீட்டர் தூரம் பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் தொடங்கி வைத்தனர்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்திலிருந்து தொடங்கி கடைவீதி, துறையூர் ரோடு, வட்டாட்சியர் அலுவலகம், புதிய புறவழிச்சாலை வழியாக வந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ளவர்கள் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலாவது பரிசு ரூ.10 ஆயிரத்தை மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலியைச் சேர்ந்த பிரகாஷ், 2வது பரிசு ரூ. 8 ஆயிரத்தை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெங்கராஜ், 3 வது பரிசு ரூ.5 ஆயிரத்தை மண்ணச்சநல்லூர் அருகே பிக்சாண்டார்கோயிலைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் பெற்றனர்.
பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் வழங்கினார். இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments