Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி தேசியக் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day), இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29இல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

தேசிய விளையாட்டு தினத்தை அனுசரிக்கும் விதமாக திருச்சி தேசிய கல்லூரியின் உடற்கல்வி துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து இன்றைக்கு  மனிதசங்கிலி மூலம் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். இதுகுறித்து கல்லூரியின் உடற்கல்வி துறையின் துறை தலைவர் டாக்டர் பிரசன்னா பாலாஜி கூறுகையில்…

விளையாட்டு என்பது  நம் வாழ்வின் ஓர் அங்கமாக   நம் உடலை சீராக வைப்பதற்கு உதவும் மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால் இன்றைய பேரிடர் காலகட்டம் அனைவரையுமே வீட்டில் முடங்கச் செய்து விளையாட்டில் இருந்து நம்மை தள்ளி வைத்துள்ளது. எனவே இது போன்ற சிறப்பு தினங்களில் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கல்லூரியின் சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட உதவி காவல் ஆணையர் அஜய் தங்கம் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை குறித்தும் மாணவர்கள் விளையாட்டில் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வலியுறுத்தியுள்ளார். இந்நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஜமால் முகம்மது கல்லூரியின் பேராசிரியர் குணசேகரன் மற்றும் தேசிய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *