இன்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை வழங்கி இருக்கிறது. அதில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை அனுமதிக்க வேண்டும் என்றும் வெளி நாட்டு மாடுகளை அதாவது கலப்பின மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நாட்டு மாடுகளை கால்நடைத்துறை மருத்துவர் பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், செயற்கை முறையில் இனப்பெருக்கம் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும், பாராட்டுக்குரியதாகும் அமைந்துள்ளது.
ஒட்டு மொத்த விவசாயிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பாக உயர் நீதிமன்றம் உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வீரவிளையாட்டு குழுத் தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments