Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருச்சி பள்ளி மாணவி

திருச்சி தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு வித்யாலயா பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி கீர்த்தி, 2020 – 2021 கல்வி ஆண்டிற்கான சர்வதேச அளவில் நடைபெறும் சர்வதேச ஆங்கில   ஒலிம்பியாட்  போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட் (IEO) என்பது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆங்கில மொழி மற்றும் இலக்கணப் போட்டியாகும். இது பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளையால் (SOF) நடத்தப்படுகிறது. IEO இன் பங்கேற்பாளர்கள் முதல் நிலை மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகிறார்கள்.

இணைய வழியில் நடைபெற்ற
இப்போட்டியில் சர்வதேச அளவில் 78வது இடத்தையும், மண்டல அளவில் 15வது இடத்தையும் பிடித்துள்ளார். இது குறித்து பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கவிதா கூறுகையில், எட்டாம் வகுப்பில் பள்ளியில் பயில தொடங்கியதிலிருந்து

ஆங்கிலத்தில் குறிப்பாக இலக்கணங்களைக் கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வத்தோடு கற்றுக்கொண்டார். அதுமட்டுமின்றி எளிதில் புரிந்துக்கொள்ளும் ஆற்றலோடு விளங்கினார். பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு அவளுடைய திறமையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் தான் காரணம்.

ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதோடு அறிவியல்  பாடப்பிரிவில் தன்னுடைய திறனை வெளிப்படுத்தும் விதத்தில் பல்வேறு வினாடி வினா போன்ற போட்டிகளில் கலந்து கொள்வார்.
இவை அனைத்தும் தான் இன்றைக்கு சர்வதேச அளவில்  வெற்றி  பெற உதவியுள்ளது. மாணவியாக எங்கள் பள்ளிக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றார். 

மாணவியின்  வெற்றிக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவியை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கும்  பள்ளி நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *