திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூரில் பாரம்பரிய பனை மரங்களை அழிவின் விளும்பிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாகவும், மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் பனை விதைகளை நடவு செய்வது என அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்குள்ள பெரியகுளம் குளக்கரையில் ஊர் நாட்டாண்மை கபில்தேவ் தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள், அப்பகுதி இளைஞர்கள் அனைவரும் திரண்டு பனை விதைகளை குளக்கரையில் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 300-க்கும் மேற்பட்ட விதைகள் நடவு செய்யப்பட்டது. சுமார் 350 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்குளத்தின் கரை முழுவதும் பனை விதைகளை நடவு செய்ய இருப்பதாக ஊர் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரம்பரிய பனை மரங்களை அழிவின் விளும்பிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக நடைபெற்ற பனை விதை நடவு பணியில் அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments