தமிழகத்தில் பழனி முருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக பக்தர்கள் காணிக்கை அதிகமாக வரும் கோவிலாக சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. சக்தி வாய்ந்த கோயிலாகவும், உலக புகழ்பெற்ற கோவிலாக சமயபுரம் மரியம்மான் கோவில் விளங்குகிறது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முப்பொழுதும் எப்பொழுதும் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் ஒருபகுதியாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி மூலமாக முப்பொழுதும் எப்பொழுதும் அன்னதான திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கலந்து கொண்டு அன்னதானத்தினை வழங்கினார். இந்நிகழ்வில் சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி கலந்துகொண்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments