தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள விடிவெள்ளி பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதனை மலைக்கோட்டை பகுதியை செயலாளர் மதிவாணன் மாணவர்களுக்கு உணவுகளை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மலைக்கோட்டை பகுதி இளைஞரணி அமைப்பாளர் விகே கோபிநாத், மலைக்கோட்டை பகுதி துணை அமைப்பாளர் மயில்குணா ராஜபாண்டி உட்பட பகுதி கழக செயலாளர்கள் வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments