தமிழ்நாடு முதல்லமைச்சர் அறிவுறுத்தலின் படியும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆலோசனைபடியும் இன்று முதல் தமிழக திருக்கோயில்களில் வழக்கம் போல் பக்தர்களை அன்னதான கூடத்தில் அமரவைத்து உணவு பரிமாற இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அதன்படி சுமார் 548 நாட்களுக்கு பிறகு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அன்னதான கூடத்தில் கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மேற்பார்வையில் பக்தர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது.
அப்பொழுது கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மேலாளர் உமா ஆகியோர் உடன் இருந்தனர் , நீண்ட நாட்களுக்கு பிறகு கோயிலில் அமர்ந்து அன்னதான உணவு அருந்தியதில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments