தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. இதனால் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரத்து 404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், இதுவரை நோய்தொற்றுக்கு ஆயிரத்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையராக பணியாற்றி வரும் தயாநிதிக்கு உடல்நிலையில் மாற்றம் தென்பட்ட நிலையில் பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யபபட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் மாநகராட்சி சக ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். அதேநேரம் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பணியாற்றி வரும் மற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments