தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தக் கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும், மக்கள் தொகை அடிப்படையில் வேலைக்கு ஆட்களை அதிகப்படுத்த கோரியும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களை வழங்க கோரியும், சட்டப்படியான ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், இஎஸ்ஐ பிஎஃப் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த கோரியும்,
மாதா சம்பளம் ரூபாய் 15,000 வழங்க கோரியும், மாதம் மாதம் சம்பளம் 5ம் தேதிக்குள் வழங்க கோரியும், கொரோனா காலத்தில் அறிவித்த ஊக்கத்தொகை ரூபாய் 15 ஆயிரத்தை உடனே வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி உள்ளாட்சி துறை தூய்மைப் பணியாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 22.9.2021 இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள சோமரசம்பேட்டை தூய்மை பணியாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சோமரசம்பேட்டை தலைவர் MR முருகன் தலைமையில் சோமரசம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments