திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு வாலிபர் தனது ஆடையில் அமெரிக்க டாலர்கள் மற்றும் துபாய் திராம்ஸ் ஆகியவற்றை மறைத்து எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு 90 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
அவற்றை பதிவு செய்த சுங்கத் துறையினர் வெளிநாட்டு கரன்சிகளை கடத்திய சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சம்பந்த முதலியார் தெருவைச் சேர்ந்த சரவணன் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments