திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளில் மருந்தகங்களில், உணவகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு முதல்முறை ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறையாக 10 ஆயிரம் என அபராதம் விதிக்கப்படுகிறது.
அதையும் மீறி தொடர்ந்து விற்பனையில் ஈடுபடுபவர்களை மூன்றாவது முறையாக கடைகளுக்கு சீல் வைக்கவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற பொருட்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து
ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகில் உள்ள நாகநாதர் டீ கடைக்கு ஆணையர் அவசர தடையானை உத்தரவு பெற்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் ரமேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் இன்று (24.09.2021) சீல் வைத்துள்ளனர். மேலும் மருந்தகங்கள் உள்ளிட்ட கடையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments