திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடும் பணி சிறப்பு முகாம்கள் மூலம் நடத்தி வரும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க கடந்த 19 ஆம் தேதி அன்று திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 126 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. கோ- அபிஷேகபுரம் கோட்டத்தில் நடைபெற்ற 34 முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர்களில் 27 நபர்கள் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் முதல் பரிசு வென்ற மகேஸ்வரிக்கு கேஸ் அடுப்பும், இரண்டாம் பரிசு வென்ற பாபுலால் என்பவர் கேரம்போர்டும், மூன்றாம் பரிசு வென்ற 25 நபர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments