திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் வார்டு எண் 8 க்கு உட்பட்ட பகுதியில் இயங்கிவரும் ஓயாமரி எரிவாயு தகனக்கூட்டத்தினை நவீனப்படுத்தவும், மராமத்து பணிகள் மேற்கொள்ளவும் இருப்பதால் 01.10.2021 முதல் 20.10.2021 வரை 20 நாட்கள் தகனக்கூடம் இயங்காது எனவும்,
மாற்று ஏற்பாடாக வார்டு எண் 57 இல் உள்ள உறையூர் கோணக்கரை தகனக்கூடம் மற்றும் வார்டு எண் 4-ல் உள்ள ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர் தகனக்கூடத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments