நாளை 26.09.2021 தமிழகமெங்கும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியத்தில் 353 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் மீண்டும் நடத்தப்பட உள்ளன.
எனவே கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இருவகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி என்னுடன் அருகிலுள்ள முகாமிற்கு சென்று தங்களுக்கு உரிய தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்ற மருத்துவ நிபுணர்களின் அறிவுரை படி பொதுமக்கள் அனைவரும் இரண்டு தவணைகள் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments