திருச்சி மாவட்ட காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு யாராலும் உரிமை கோராமல் இருக்கும் 202 வாகனங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் மீது உரிமை கோரி இதுநாள் வரை யாரும் எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்காததால் அந்த 202 வாகனங்களையும் அரசுடைமையாக்கி திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி வாகனங்கள் அனைத்தும் உரிய அலுவலர்கள் முன்னிலையில் இன்று (30.09.2021) சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்பட்டது. ஏலம் கோர விருப்பமுள்ளவர்கள் முன்வைப்புத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு 2,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாயும் செலுத்தி ஏலம் கேட்டு வருகின்றனர்.
ஏலத்தொகை உடன் தனியாக சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். இதில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. 202 வாகனங்களுக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments