திருச்சி மாநகரில் லாட்டரி விற்பனை மற்றும் சில்லறை மது விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை 3 நாட்கள் திருச்சி மாநகர கண்டோன்மென்ட், பொன்மலை, கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 30 நபர்கள் மீது 16 வழக்குகளும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 10 நபர்கள் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து மொத்தமாக 4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
மேலும் சில்லறை மது விற்பனை செய்த 39 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 271 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் மூன்று நாட்களில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 46 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் மொத்தமாக 126 நபர்கள் மீது 106 வழக்குகளை பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments