பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த ரவி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு கலப்பட டீசல் எரிவாயு விற்பனைக்கு கொண்டு செல்கிறார். இதுகுறித்து திருச்சி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் டி.எஸ்.பி இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சோதனை நடத்திய போது ஒரு லாரியில் முழுவதும் சுமார் பத்தாயிரம் லிட்டர் அளவில் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்தது. கலப்பட டீசல் லாரியை கைப்பற்றி ரவியை கைது செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments