திருச்சிராப்பள்ளி சீர்மிகு நகரத்திட்டம் – 75 ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப்பெரு விழா திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக, Freedom 2 Walk and Cycle Campaign- நிகழ்ச்சி மத்திய அரசு மற்றும் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக அண்ணாநகர் இணைப்பு சாலை உய்யகொண்டான் கால்வாய் ஒட்டி அமைந்துள்ள ( மேற்கு பகுதி ) சாலையில் எடமலைபட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும், யோகாசனப் பயிற்சி நிகழ்ச்சி மற்றும் மகளிர்களுக்கான மிதிவண்டி பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் 02.10.2021 ம் தேதி இன்று காலை 6.30 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணியாளர்கள் , அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர் . மிதிவண்டி பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்பித்தார்.
யோகா பயிற்சி ஆசிரியர் யோகா ஸ்ரீ என்.ராமசாமி தலைமையில் யோகா பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஹாலோ எப்.எம் .106.4 சகா மற்றும் உடன் பணிபுரியும் அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர பொறியாளாளர் எஸ் .அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் பி.சிவபாதம், ஜி.குமரேசன், உதவி ஆணையர்கள் ச.நா.சண்முகம், செ.பிரபாகரன் எஸ்.திருஞானம், சு.ப.கமலக்கண்ணன், எஸ்.செல்வபாலாஜி மற்றும் பொதுமக்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments