Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி காவல் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பதாகை மீது ஆட்டோ மோதி விபத்து – ஓட்டுநர் மூக்கு உடைந்தது

திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அந்த பதாகை காவல் நிலைய நுழைவாயில் முன்பு வைக்கப்பட்டுள்ளது.

அங்கு சிக்னல் உள்ள நிலையில் இன்று காலை அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று அந்த விளம்பர பதாகை மீது வேகமாக மோதி ஒரு பக்கமாக சாய்ந்தது. இதில் ஆட்டோ ஓட்டுனருக்கு மூக்கு உடைபட்டு ரத்தம் சொட்டியது. பலத்த சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் வெளியே வந்து பார்த்தபோது பதாகை மீது ஆட்டோ மோதி இருந்திருப்பதை அறிந்த உடனே சாலையின் நடுவில் கிடந்த ஆட்டோவை அப்புறப்படுத்தி ஓட்டுநரை மீட்டனர்.

பின்னர் ஓட்டுநரை போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தினார். மேலும் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டததில் ஆட்டோ பிரேக் பிடிக்காததால் சிகப்பு சிக்னல் விழுந்தது.  இதனால் ஆட்டோவை நிறுத்த முயன்ற போது பிரேக் பிடிக்காததால் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஓட்டுநர் தெரிவித்ததையெடுத்து முகவரி பெற்று அவரை  அனுப்பி வைத்தனர்.

சாலை ஓரங்களிலோ அல்லது பொது இடங்களில் விளம்பரம் மட்டும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *