திருச்சி காந்தி மார்க்கெட் 6ம் நம்பர் நுழைவாயில் கதவு தூண் மிகவும் மோசமாகவும், தொடர் மழை காலமாகவும் இருப்பதால் தூண் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தரைக்கடை வியாபாரிகள் அருகில் வியாபாரம் செய்து கொண்டு வருவார்கள்.
ஆகையால் ஏதேனும் விபத்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாகவே மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுக்குமாறு மாநகராட்சி ஆணையரிடம் SDPI கட்சி திருச்சி மாவட்டம் வர்த்தகர் அணி சார்பாக திருச்சி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் பக்ருதீன் தலைமையில் அரியமங்கலம் கோட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
உடனடியாக இதை சரி செய்து தருகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். மேலும் உதவி ஆணையார் அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரி குமார் நேரில் வந்து சேதமடைந்த 6ஆம் நம்பர் நுழைவு வாயில் கதவு சுவரையும், பாக்கு மந்தை நுழைவு வாயிலையும் பார்வையிட்டார். வரும் திங்கள் கிழமைக்குள் சரி செய்து தருகிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.
இந்நிகழ்வில் வர்த்தகர் அணி திருச்சி மண்டல தலைவர் MAJ சாதிக் முன்னிலை வகித்தார். தேங்காய் கடை சண்முகம், பூக்கடை அன்சாரி உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments