திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன் (35). மளிகை கடை வைத்திருக்கும் இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கலையரசன் சொந்த வேலையாக வெளியில் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு முன் வைக்கப்பட்டு இருந்த கிளிக்கூண்டில் 7 நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பு புகுந்து கொண்டது.
இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பிரபு தீயணைப்பு வீரர்கள் விஜய், சாகுல்ஹமீது,
விஜயஅமிர்தராஜ், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பின் 7 அடி நீளமுள்ள மஞ்சள் சாரைப் பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர் பாம்பை வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments