மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
விவசாயிகள் திருச்சியில் திருச்சி to கரூர் பைபாஸ் சாலை அருகில் அண்ணாமலை நகர், மலர் சாலையில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 6ம் நாளான இன்று (17.10.2021) விவசாயிகள் உண்ண உணவின்றி வயலில் கிடைக்கும் எலிகளை தின்று இறந்துபோன விவசாயிகளுக்கு பாடை கட்டி நூதன முறையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments