திருச்சி மாவட்டம் உப்பிலிபுரத்தை அடுத்த ஒக்கரை கைகாட்டி பகுதியில் உள்ள சாலையோரம் மலை பாம்பு கிடைப்பதாக அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து விரைந்து வந்த நிலைய பொறுப்பாளர் சங்கரம்பிள்ளை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்தனர். அந்த மலைப்பாம்பு இறையை விழுங்கிய நிலையில் இடத்தை விட்டு நகர முடியாமல் இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பு துறையூர் வன சரகர் பொன்னுச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் பச்சைமலை காப்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

13 Jun, 2025
385
21 April, 2023










Comments