திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி.கே.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்தி நாட்டார். இவருடைய மனைவி 60 வயதான காமாட்சி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருவரும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
விவசாயம் செய்து வரும் கணவன், மனைவி இருவரும் கிராமத்துக்கு அருகில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் வீடு காட்டுப் பகுதியில் தனிமையில் உள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் கணவன் மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். தற்போது கோடை காலம் என்பதால் காற்றோட்ட வசதிக்காக ஒரு கதவை திறந்து வைத்து தூங்கி உள்ளனர்.
வீடு தனிமையில் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அதிகாலை வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த காமாட்சி கழுத்தில் கிடந்த தங்க நகைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பறித்துள்ளனர். இதில் சத்தம் கேட்டு சுதாரிதித்த காமாட்சி அந்த மர்ம நபர்களுடன் போராடி சத்தம் போட்டு உள்ளார்.
அதற்குள் மர்ம நபர்கள் 10 பவுன் எடை கொண்ட தாலி செயினை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காமாட்சி சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சிறுகனூர் காவல் உதவி ஆய்வாளர் நித்தின் வழக்கு பதிவு விசாரணை செய்து நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்க்கு வந்த குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

13 Jun, 2025
388
19 April, 2023










Comments