திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சடவேலாம்பட்டியில் உள்ள முதலிக்குளம் பகுதியில் கோழிகளை இரையாக எடுத்துக்கொண்ட மலைபாம்பு ஒன்று அங்கிருந்த எலி பொந்தில் நுழைந்திருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இதுப்பற்றி தகவலினையடுத்து துவரங்குறிச்சி வனச்சரகர் பவித்ரா உத்தரவின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற வனக்காப்பளர் பாலமுருகன் தலைமையிலான வனத்துறையினர், துவரங்குறிச்சி தீயணைப்புத்துறை சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன்
தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் எலி பொந்திலிருந்து 12 அடி நீள மலைப்பாம்பினை துறை கருவிகளில் பிடித்தனர். பின் அந்த பாம்பு அருகிலிருந்த வனப்பக்குதியில் விடப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments