திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சமுத்திரம் காந்திநகரை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி வீட்டில் இருந்த நிலையில் மாயமானார். அது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மணப்பாறை போலீஸில் புகார் அளித்தனர்.
சில தினங்களில் போலீஸாரின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என்றும் அருகில் உள்ள மரவனூர் பகுதியில் வசித்து வரும் கந்தசாமி மகன் பிரச்சன்னா வெங்கடேஷ் (19) என்ற இளைஞர் கடத்தி சென்றிருப்பதாக சந்தேகப்படுவதாகவும் கூறி சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி. ஆர்.பிருந்தா, தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடும் பணியினை முடுக்கிவிட்டார். கடந்த 8 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில், திருப்பூர் அருகே திருமூர்த்தி அருவி பகுதியில் தங்கிருந்த சிறுமி மற்றும் இளைஞரை சுற்று வளைத்த தனிப்படையினர் சிறுமியை, மீட்டு இளைஞரை கைது செய்து மணப்பாறை அழைத்து வந்தனர்.
சிறுமிக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதாக தெரியவந்தது. சிறுமியை கடத்தியது, பாலியல் அத்துமீறல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் கீழ் பிரச்சன்னா வெங்கடேஷ் மீது மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments