திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம். இவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தற்போது தனது வீட்டின் அருகில் ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்கள்.
நேற்று மாலையில் சுந்தரம் கோழிகளை வீட்டின் அருகில் உள்ள கூண்டுக்குள் அடைத்து பூட்டிவிட்டு வந்தார். இந்நிலையில் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் கூண்டுக்குள் அடைத்த கோழிகள் கத்தின. சுந்தரம் வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வருகிறார். அந்த நாய் அதிகம் சத்தமிட்டு சுந்தரம் படுத்திருந்த இடத்திற்குச் சென்று அவரது ஆடையை பிடித்து கோழி இருக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்றது.
அப்போது அந்த கோழிப் கூண்டில் 6 அடி அடி நல்ல பாம்பு உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பாம்பு அடையில் இருந்த கோழி முட்டையை கவ்வியபடி கிடந்தது. இதுபற்றி சுந்தரம் ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சகாயராஜ், நிலைய அலுவலர் பெரியண்ணன், சிறப்பு நிலைய அலுவலர் பால்ராஜ், சந்திரசேகர்,
குமரன், கமல் சிங் தலைமையில் வீரர்கள் வந்து கோழி கூண்டில் கிடந்த 6 அடி நீளமுள்ள கொடிய விஷம் உள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதனை வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர். நாயின் சாமர்த்தியத்தால் கோழி கூண்டில் இருந்த அனைத்து கோழிகளும் பாதுகாக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments