திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் அண்ணாசிலை பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் பிறந்த நிலையில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தையை ஒரு துணியில் சுற்றி கிடந்துள்ளது. இன்று காலை அந்த குப்பையை எடுக்க சென்ற துப்புரவு பணியாளர் அதைப்பார்த்து வார்டு மேஸ்திரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக மேஸ்திரி துப்புரவு பணியாளர் மூலம் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் சரவணன் ஆகியோர் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு சென்று மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி அளித்தனர்.
இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்ட நபர் யார் என்பது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments