ஸ்ரீரங்கம் கோயில் ஒப்பந்த கொரானா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறக்பிக்கப்பட்டு சுமார் 1 மாத காலமாக வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாத காரணத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோயிலில் பணிபுரியும் ஓப்பந்த பணியாளர்களுக்கு சென்னையை சேர்ந்த ஜோதி என்ற உபயதாரர் 300 ஒப்பந்த பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி உள்ளார்.
இதில் தலா 1 கிலோ வீதம் சர்க்கரை, உப்பு, ரவை, கோதுமைமாவு, துவரம் பருப்பு அடங்கிய தொகுப்பினை அனுப்பி வைத்தார். அதை இன்று கோயில் ரெங்க விலாஸ் மண்டபத்தில் இணை ஆணையர் செ.மாரிமுத்து வழங்கினார். முன்னதாக ரெங்கா ரெங்கா வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சரி பார்க்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments