திருச்சி மாவட்டம் முசிரி வட்டம் வெள்ளாளப்பட்டி யில் செயல்பட்டுவரும் சேலத்தைச் சேர்ந்த. புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பருமான ஆத்தூர் புத்திர கவுண்டன் பாளையத்தை சேர்ந்த
இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான
எம்ஐடி வேளாண் கல்லூரி, Poly Technic College, ரேணுகாதேவி நகரில் உள்ள சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆதித்யா என்பவருக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜு, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் 22 பேர் அடங்கிய குழு தற்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments