திருச்சி ஆயுதப்படையில் காவலராகபணியாற்றி வருபவர் யுவராணி. கே.கே.நகர் காவல் துறை குடியிருப்பில் வசித்து வரும் இவர் பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் சென்ற
நிலையில் யுவராணியின் கணவர் வீட்டை பூட்டி சாவியை காலணி வைக்கும் இடத்தில் வைத்து சென்றுள்ளார். மர்மநபர்கள் ஏற்கனவே காவலர் குடியிருப்பில் நோட்டமிட்டபடி இருந்தனர் என்று கூறப்படுகிறது.
யுவராணியும் அவரது கணவரும் வீட்டில் இல்லாததை அறிந்து அதை பயன்படுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்துள்ளனர். வீட்டில் உள்ள நான்கு சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.மார்க்கெட் சென்று திரும்பிய யுவராணி வீடு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர்கள் குடியிருப்பிலேயே திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments