Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

கருவாடு மீனாகாது – கறந்தபால் மடிபுகாது – அது அன்று ஆனால் இன்று?

திகவில் இருந்து திமுக, திமுகவில் இருந்து அதிமுக அதன்பின் திமுகவில் இருந்து மதிமுக …

என்ன தலைவரே என்ன இது ?

மூச்சு வாங்குது ராஜீ…

ம்ம் உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா காங்கிரஸ்ல இருந்து எத்தனை பிரிவுகள் ஒரு படத்துல விவேக் சொல்றாப்புல காகா தேகா தேகா காமுகா காகா தமாக இப்படினு சொல்லலாம் இல்ல 

இனிமே நான் ஸ்கிர்ப்ட் அடிக்கறப்ப பக்கத்துல நீ வரவே கூடாது ராஜீ. இது என்னோட ஸ்டிரிக்ட் ஆர்டர்

தலைவரே அப்படி என்ன உங்க பெயரை கெடுத்துட்டேன் குட்டுபட்டாலும், மோதிர கையால குட்டு படணும்னு சொல்வாங்க அதுபோல நானும் உங்க மோதிர கையால குட்டுபட்ட பெருமைக்கு சொந்தகாரனா ஆகலாம்னு நினைச்சேன்

சரி சரி நீ என்ன வேணுமானாலும் ஆகிட்டுபோ. ஆன என்னுடைய பெயருக்கு மட்டும் களங்கத்தை கற்பிச்சுடாத. ஏன்னா நான் கவரிமான்! 

சரி, தலைவரே உங்க தலையில அடிச்சு சத்தியம் பண்றேன் உங்க பெயரை கெடுக்கும் விதமாக நான் என்றும் நடக்க மாட்டேன்.

இப்படி சொன்ன எப்படி ஒரு இருபது ரூபாய் பத்திரத்துல எழுதிக்கொடு அட நீவேற ராஜீ நா சும்மா சொன்னேன்

சரி சரி விஷயத்துக்கு வருவோம் தலைவரே அந்த அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ?

அதபத்தித்தான் ராஜீ இன்னைக்கு பேசப்போறோம்…

பாஜகவோட 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிச்ச கட்சிகளில் அதிமுகவும் ஒண்ணு ஏற்கனவே இரண்டும் ஆண்கள் இருக்கிறதால, திருச்சி மாநகர் மாவட்டச்செயலாளராக ப்ரியா சிவக்குமாரை ஆக்கி அழகு பார்க்க நினைச்சாங்களாம். அதுக்கான அறிவிப்பு புதன்கிழமை பிரதோஷ நாளில் வந்துடும்னு ஒரு குரூப் ரவுண்டிகட்டி வலம் வந்தது அவங்களுக்கு புல் சப்போர்ட்டா எம்.சி.சம்பத் இருக்காருனு பேசிக்கிட்டாங்க. ஆனா மற்றொரு குரூப்போ அதெல்லாம் கிடையாது ஆவின் சேர்மேன் கார்த்திதான் ஏன்னா அவரு எடப்பாடி வீட்டு கிச்சன் கேபினட்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. இப்படி இருந்த நிலையில் அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய இருவரில் ஒருவருக்குத்தான்னு அடிச்சு சொன்னாங்க மற்ற ஆதரவாளர்கள்.

அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் ஆசைகள் 

தலைவரே அது ஆசை இல்ல மாற்றங்கள் 

சரியா சொல்லுறியானு பார்த்தேன், ஆனா ஒரு சின்ன கரெக்‌ஷன் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் இல்ல அதைத்தான் கொஞ்சம் மாத்தி பாடினேன் ராஜீ 

மாநகர் மாவட்டச்செயலாளர் ரேசில் இருந்தது நால்வர். அதில் மூத்தவர் மனோகரன் அவருக்கே நோ சொல்லிட்டாங்கனா 

அதான் அவர் பெயரிலேயே னோ இருக்குள்ள அதனால இருக்கலாமோ என்னவோ

நீ வேற ராஜீ அதைவிட பெரிய பதவியா அமைப்புச்செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்காரு எடப்பாடியார் இதவிட வேற என்ன வேணும் அதுவும் சரிதான் தலைவரே

ஆமாம் தலைவரே கார்த்திக்கு ஏன் மறுக்கப்பட்டதாம்

எப்பொழுதும் நாம எனக்கு என்ன வேணும்னு கேட்கணும். ஆனா பக்கத்து இலைக்கு பாயசம் கேட்குறது அவ்வளவு சரியா இருக்காது. அதுமாதிரி என்னைய போஸ்டிங்ல போடாட்டியும் பரவாயில்லை. ரத்தினவேலுக்கு கொடுங்கனு சொன்னதால கோபமாகிட்டதா பேசிக்கிறாங்க. ஆனாலும் எப்பொழுதும் போல சிரிச்சுகிட்டே நீ நம்ம ஆளுய்யா அப்புறம் பார்த்துக்கலாம்னு இன்னும் உனக்கு வயசு இருக்குனு சிரிச்சு மழுப்பியே அன்பாக அனுப்பி வச்சுட்டாராம்.

கலைஞரைப்போல இதயத்துல இடம் கொடுத்துட்டாருனு சொல்லுங்க தலைவரே

ஆமாம் ராஜீ நிறைய உள்ளடிவேலை நடந்திருக்காம். ராஜீ ஒவ்வொரு விஷயமா இனிமே வெளியே வரும் அப்ப பார்த்துக்கலாம் ராஜீ

தலைவரே ஆனா ஒண்ணை கவனிச்சிங்களா 

நான் நினைச்சத நீ சொல்ல வர்ற. நானே சொல்றேன் சரியானு மட்டும் சொல்லு

சாதிக்கு ஒண்ணு சாதனைக்கண்ணு அடி நீ பின்னு அதுதானே நீ சொல்ல வந்தது,

தலைவரே உங்க சிஷ்யனா இருக்குறதுல ரொம்ப பெருமையா இருக்கு சரியா நான் நினைச்சதை சொல்லிட்டிங்க

திருச்சியில இருக்கற மூணு முக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவுங்களுக்கும் பதவி கொடுத்து எல்லாரையும் குஷிப்படுத்திட்டாருன்னு சொல்ல வர்றீங்க…

அதே… அதே… ஆக திருச்சி மாவட்டத்தை தன்னுடைய கையில் கொண்டு வந்துட்டாரு அப்படித்தானே

அட நீவேற கட்சியதான் தன்னுடைய கண்ட்ரோல்ல கொண்டு வந்து இருக்காரு. நாடாளுமன்றே தேர்தல் முடியும்வரை இவர்கள் மாற்றப்பட வாய்ப்புக்கள் இல்லை. ஆக நாடாளுமன்றதை கைப்பற்றினால் இது சக்ஸஸ் பார்முலாவாக பேசப்படும் பார்க்கலாம் என்ன நடக்குதுனு !

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *