திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் மாதாகோயில் தெரு சேர்ந்தவர் அருள்ராஜ் (41). இவர் ஜல்லிக்கட்டு வீரர் இவருக்கு லாரன்ஸ் மேரி என்ற மனைவியும், 15 வயதுக்குட்பட்ட இரண்டு மகன்களும் உள்ளனர். அருண்ராஜ் ஜல்லிக்கட்டு வீரர் என்பதால் ஜல்லிக்கட்டு காளை அடக்குவது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் உள்ளிட்டோர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் லால்குடி மாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவின் போது இந்த அருண்ராஜை, தயாளன் தரப்பினர் தாக்க முற்பட்டனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்கு செலுத்த சென்றுள்ளார் அருண்ராஜ். அப்போது அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள பாசன வாய்க்கால் கரையில் மது அருந்தி கொண்டிருந்த தயாளன், சங்கர், ரமேஷ் உள்ளிட்டோர் அருண்ராஜை வழிமறித்து கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை அருண்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments