திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பிரிவு சாலையிலிருந்து ஒட்டம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க கிளைமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து கிடப்பதாக துறையூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் உயிரிழந்து கிடந்த மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
தற்போது கோடைக்காலம் என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வற்றிய நிலையில் ,குடிநீர் தேவைக்காக வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிக்கடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments