சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன். இவரது மனைவி 22 வயதுடைய மதுமிதா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மதுமிதா இவரது தந்தை சரவணனும், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மொட்டை அடித்து நேர்த்தி கடனை செலுத்திவிட்டு பொது தரிசனத்திற்கு செல்லும் வழியில் மதுமிதாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது மதுமிதா மயங்கி கீழே விழுந்ததை பார்த்த தந்தை சரவணன் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர். அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்கள் உதவியோடு சமயபுரம் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆட்டோ மூலமாக கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.
மதுமிதா வை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments