தமிழகத்தில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆடி மாதம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக நடந்து வந்து அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம், போரம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்துகொண்டிருந்தனர். சமயபுரம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவிடை பாலம் அருகே பக்தர்கள் வந்துகொண்டிருந்தபோது சிவசாமி என்ற பக்தர் மீது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments