Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

குடியரசு தலைவருக்கு மரண வாக்குமூலம் அனுப்பிய பிரபல ரவுடி

திருச்சி மாவட்ட போலீசார் அண்மையில் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்த ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் என்ற ரவுடியை திருச்சி எஸ்பிஐ தனி படை போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டு கொண்டனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிபட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஸ் (எ) பட்டறை சுரேஷ் என்பவரை திருவெறும்பூர் போலீசார் அடுத்த சில தினங்களில் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றனர்.

ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட பரபரப்பு அடங்காத நிலையில் பட்டறை சுரேஷ் விசாரணைக்கு திருவெறும்பூர் போலீசார் அழைத்துச் சென்றதால் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பட்டறை சுரேஷ் மீது வழக்கு எதுவும் பதியாமல் எழுதி வாங்கிக்கொண்டு திருவெறும்பூர் போலீசார் விடுவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது திருவெறும்பூர் அருகே உள்ள கீழே கணபதி நகரை சேர்ந்த பாட்டில் மணி (எ) தினேஷ்குமார் ( 30 ) என்பவனை இரண்டு நாட்களுக்கு முன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் கைது செய்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவன் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 23 வழக்குகள் உள்ளது. இதில் சில வழக்குகள் முடிவுற்றது இந்த நிலையில் திருவெறும்பூரில் 2019 ஆம் ஆண்டு பிரபல ரவுடி ரஜினி (எ) கருப்பையாவை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான பாட்டில் மணி உள்ளான்.

 இந்த நிலையில் அந்த வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் ரஞ்சித் குமார் என்பவர் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சாட்சி சொல்ல கூடாது என அரிவாளை காட்டி மிரட்டியதாக ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் பாட்டில் மணியை கைது செய்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பாட்டில் மணி தன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளுக்கு முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதாகவும், அப்படி ஆஜராக செல்லும் பொழுது போலீசார் தன்னை பொய் வழக்குகள் போட்டு கைது செய்து விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்வதாகவும் இதனால் சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தற்போது தன்னை கைது செய்துள்ளது என்கவுண்டர் செய்ய உள்ளதாக தெரிய வருகிறது. தான் தற்பொழுது குற்ற செயல்களில் இருந்து திருந்தி வாழ முடிவு செய்துள்ளதாகவும் இந்த நிலையில் போலீசார் பிடித்து வழக்கு போடுவதுடன் தன்னை சுட்டுக் கொள்ள சதி திட்டம் தீட்டி உள்ளார்கள் நான் இந்த அளவுக்கு ரௌடியானதற்கு நான் மட்டும் காரணம் இல்லை தமிழக போலீசாரும் தான்.

எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழ்நாடு போலீசார் தான் முழு காரணம் . எனவே இதை எனது கடைசி மரண வாக்குமூலமாக எடுத்து கொள்ள வேண்டும் என கூறி இந்திய குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட 16 அரசு துறை அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் புகார் மனு செய்துள்ளதாகவும் பிடிஎப் கடிதம் ஒன்றும் பாட்டில் மணி பேசியதாக ஆடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றன. இதனால் திருச்சியில் உள்ள பிரபல ரவுடிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *