திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மிலிட்டரி கேண்டீன் எதிரே உள்ள ராஜ் ஹாட் சிக்கன் உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிலிட்டரி கேண்டீனில் தீயணைப்பான் கருவிகளை எடுத்து வந்து தீயை பரவாமல் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து விசாரித்த பொழுது அசைவ உணவு செய்யும்போது சிம்னியில் தீ பிடித்து எரிந்துள்ளது.
கடையில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments