திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை செவந்தாம்பட்டி பிரிவு அருகே நேற்று மாலை மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். கார்களில் சிக்கியிருந்த அவர்களை மீட்கும் பணியில் துவரங்குறிச்சி தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணிகள் துறை வீரர்கள் முழுமையாக ஈடுபட்டனர். இதில் பணியாற்றி முன்னணி தீயணைப்பாளர் கிருஷ்ணகுமார், நள்ளிரவு நிலையத்தில் பணியில் இருந்தவர் உணவு அருந்த சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் நிலையம் திரும்பாதவரை சக வீரர்கள் தேடி சென்றபோது அடையாளம் தெரியா வாகனம் மோதி சென்ற விபத்தில் நெடுஞ்சாலை ஓரத்திலிருந்து கிருஷ்ணகுமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய உயிர்களை மீட்கும்பணியில் ஈடுபட்ட வீரர் அடுத்த 8 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments