திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூரைச் சேர்ந்தவர் மாலதி சுரேஷ் தம்பதினர். இவர்கள் விவசாயம் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கூண்டு வைத்து புறா வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்த புறாக் கூண்டுக்குள் 5 அடி நீளமுள்ள நல்லப்பாம்பு புகுந்தது.
இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலறிந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் ராஜா, சசிகுமார், சுரேஷ், அருண், மனோஜ்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து புறாக் கூண்டில் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்லப் பாம்பை சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த பாம்பை கொள்ளிடம் வனப்பகுதியில் விடுவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments