திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட எரகுடி பகுதியில் வசிப்பவர் பிரகாஷ் இவரது மனைவி மதுமதியின் அண்ணன் மகள் 9-வயதான மித்ரா தன் அத்தை மதுமதி வீட்டின் வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்வீட்டு மண் சுவர் தொடர் மழையின் காரணமாக நனைந்து இருந்ததால் சற்றும் யாரும் எதிர்பாராத நேரத்தில் இவர்கள் மீது விழுந்தது சுவர் இடிந்து விழுந்ததில் மதுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த குழந்தை மித்ரா துறையூர் அரசு மருத்துவமனையில் முதலு உதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .
அங்கு சுய நினைவின்றி இருந்த குழந்தை மித்ரா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உப்பிலியபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments