திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் உள்ள முக்கொம்பு காவிரி ஆற்றில் குளிக்க சென்ற வாத்தலை கிராம மக்கள் தண்ணீரில் குழந்தை ஒன்று மிதந்து வந்ததை கண்டனர். பின்னர் இதுகுறித்து வாத்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் அப்பகுதி மக்கள் உதவியுடன் குழந்தையை மீட்டு காவிரி ஆற்றங்கரையில் வைத்தனர். மேலும் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை சடலமாக மிதந்து இருந்தது தெரிய வந்தது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி ஆற்றில் இறந்த நிலையில் மிதந்து வந்த பெண் குழந்தை உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தையை ஆற்றில் வீசியது யார் என்பது குறித்து குணசீலம், வாத்தலை, தொட்டியம் ஆகிய கிராமங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments