Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

திருச்சி தென்னூர் அருகே பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து -போக்குவரத்து பாதிப்பு

திருச்சி,தென்னூர் அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்திற்கு சற்று முன்பாக சிவன் கோவில் அருகே 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஒன்று பெரும் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு சிறிது நேரம் பகுதியளவு சாய்ந்த நிலையில் சாலையின் நடுவே நின்றது.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து சாய்ந்துவிடாமல் சிறிது நேரத்திற்கு பிறகு நிலைநிறுத்தப்பட்டு பள்ளத்தின் வெளியே வந்து சென்றது.பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளத்தின் அருகே நடுநிலைப்பள்ளி இருப்பதால் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு கவனம் செலுத்தி உடனடியாக சரிசெய்து கொடுத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *