Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சிறுமியின் காது கேட்கும் கருவியை சரிசெய்ய ஒரு லட்சம் நிதி திரட்டி உதவிய அரசு பள்ளி ஆசிரியர்

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள ஆலம்பாடியைச் சேர்ந்த மார்டியாவுக்கு இரண்டு வயதாக இருந்தபோது காது கேளாமை இருப்பது கண்டறியப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியபோது, ​​அவரது செவிப்புலன் கருவி (வெளிப்புறச் சாதனம்) வேலை செய்வதை நிறுத்தியது குடும்ப சூழலால் அதை சரிசெய்ய முடியவில்லை. கருவியை சரி செய்ய ரூ.60,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று மாணவியின் தாயார் திவ்யா கூறினார்.

பலவழிகளில் முயற்சி செய்த பின் , கடைசியாக பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான சதீஷ்குமாரிடம் உதவி கிடைத்ததுள்ளது. 1 லட்சத்துக்கும் சற்று அதிகமாக நிதியை ஏற்பாடு செய்து, கருவியை சரிசெய்ய உதவி செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ஆசிரியர் சதீஷ்குமார் கூறுகையில், “குழந்தைக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், நன்றாக படிக்க வேண்டும். சாதனத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அவள் பேசுவதில் அடைந்த முன்னேற்றத்தை இழந்துவிட்டாள். அவளால் அதை சரி செய்ய முடியாமல் போனதால், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காது கேட்கும் கருவியை அவள் அணியவில்லை அவரது தாயார் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த சேவையை எங்களால் செய்ய முடிந்தது என்றார்.

சாதாரண பின்னணியில் இருந்து வந்த மாணவியின் தாய் திவ்யா பல இன்னல்களை சந்தித்துள்ளார். அவர் இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். ஒரு ஊனமுற்ற நபராக வாழ்க்கையை வாழ்பவர், பல போராட்டங்கள் சந்தித்ததால் தன் பிள்ளையையும் அப்படியே போக விடமாட்டேன் என்று போராடி வருகிறார்.அவருடைய

கணவர் உள்ளூர் இரு சக்கர வாகனக் கடையில் வேலை செய்கிறார். வாழ்க்கை நடத்துவது கடினம். கடன் வாங்கித்தான் இத்தனை வருடங்களையும் சமாளித்து வந்தோம், சில சமயங்களில் கடன் வாங்கக்கூட பணம் இல்லாமல் போய்விட்டது என்றார். தனது மகளுக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதன் பிறகு அவளால் காது கேளாததாகவும் அவர் கூறினார். 

காக்லியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சத்திற்கும் மேல் செலவானது. உதவி கோரி அப்போதைய கலெக்டரிடம் மனு அளித்து, 2017-ம் ஆண்டு MGMGH-ல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் மார்டியா. ஒரு வருடம் பேச்சு சிகிச்சைக்காகச் சென்றார். இதனால் அவரது வழக்கமான பள்ளிப்படிப்பு தாமதமானது என்று திவ்யா கூறினார்.

மார்த்தியா ஆலம்பாடியில் உள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் மாநில அரசு CMCHIS பயனாளிகளுக்கு காக்லியர் துணை சேவைகளை சேர்த்தது. டாக்டர் பழனியப்பன், HOD ENT துறை, MGMGH, “மிக முக்கியமான காரணி ஒரு வருட மறுவாழ்வு / பேச்சு சிகிச்சை ஆகும். வெளிப்புற சாதனத்தை நன்கு பராமரிப்பது மிகவும் முக்கியம்.

அரசினால் குழந்தைக்கு பேச்சு மற்றும் செவித்திறன் பாதிப்பு குறைந்த சூழலிலும் இயந்திரத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதற்கான சூழல் இல்லாமல் இருப்பதால் இயந்திரத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அரசே சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அக் குழந்தையின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

டெலிகிராம் மூலமும் அறிய… https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *