திருச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகர சபை மற்றும் கிராம சபை கூட்டம் பொன்மலை மண்டலம் 3 வார்டு எண் 46 இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர செயலாளர் மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோரும் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் சம்பந்தமாகவும் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் மனுக்களை அமைச்சரிடமும் , மாநகராட்சி ஆணையரிடமும் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம், பைத்தம்பாறை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று (01.11.2022) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் மற்றும் முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்
இதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கும், மகளிர் திட்டத்தின் சார்பில் 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவியும், 5 தனிநபர் கடன் உதவியும், முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு ஊக்கத் தொகை உதவித்திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும் என 36 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
பின்னர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு சாலைகளின் ஓரத்தில் பனைவிதைகளை நட்டு வைத்தனர்.
இந்நிகழ்வில், தாத்தையங்கார் பேட்டை ஒன்றியக்குழுத்தலைவர் சர்மிளா பிரபாகரன், பைத்தம்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.என்.கமலநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.கங்காதாரிணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, 27 வது வார்டு, பட்டாபிராமன் பிள்ளை தெரு, பகுதியில் இன்று (01.11.2022)
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் நகர்ப்புறங்களிலும் மக்களின் பங்களிப்பினை உறுதி செய்யும் பொருட்டு பகுதி சபை கூட்டம் மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர பொறியாளர் பி.சிவபாதம், உதவி செயற்பொறியாளர் அ.ராஜேஷ்கண்ணா, இளநிலை பொறியாளர் இப்ராகிம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments