திருச்சி மாவட்டம் முசிறி பழைய பேருந்து நிலையத்தில் தனியார் காம்ளக்ஸில் தங்கும் விடுதி அமைந்துள்ளது. விடுதியின் கீழ்தளத்தில் பழக்கடை, உணவகம் போன்ற கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு மலையப்பபுரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (54) என்பவரின் பழக்கடையில் திடீரென தீ பற்றியது.
இதனை கண்ட அப்பகுதியினர் முசிறி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜன் தலைமையில் வந்த குழுவினர் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் காம்ப்ளக்ஸில் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் பெரும் சேதம் தடுக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments