திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் இங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் qpms என்னும் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மருத்துவமனையில் தூய்மை மற்றும் மருத்துவ உபகரணங்களை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நிறுவனத்தின் சலவை பிரிவில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவர் செவிலியர் அல்லது இசிஜி எடுக்கும் பரிசோதகர் உதவி இல்லாமல் அவராகவே நோயாளிக்கு இசிஜி எடுக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் பொதுமக்கள் ஒருவர் கேட்டபோது ஆளில்லாத நேரத்தில் இசிஜி எடுக்க உதவி செய்வேன் என்று அந்தப் பணியாளர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments