திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிபாஸ்கர் அலுவலகத்தில் ஏசி கம்ப்ரஸர் மற்றும் காப்பர் பைப் திருடி போயியுள்ளதாக (04.05.2023) அன்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், தொடர்ந்து அதே ஏரியாவில் போலீஸ்க்கு சவால் விடும் விதமாக
(15.09.2023) நேற்று வரை தொடர்ந்து 25 வீட்டுக்கு மேல் ஏசி காப்பர் பைப்பினை திருடி வந்த திருடனை, ஹரிபாஸ்கர் வழக்கறிஞர் தலைமையில் பொதுமக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தெற்கு யாதவ தெருவில் மற்றொரு வழக்கறிஞர் வீட்டில் உள்ள ஏசி காப்பர் பைப்பினை திருடிய 17 வயது சிறுவனை கையும், களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த சிறுவனை பாலக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments