கடந்த (17.07.2024)-ந் தேதி, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என்.ஆர் வாட்டர் குடோன் அருகில் இரவு நடந்து சென்றவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பணம் ரூ.1200/- மற்றும் செல்போனை வழிப்பறி செய்ததாக புகார் பெறப்பட்டது.
இந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (24) த.பெ.சங்கர் என்பவர் இக்குற்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்து, எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விசாரணையில், ஸ்ரீதர் என்பவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் 4 வழிப்பறி வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.ஜஎனவே, ஸ்ரீதர் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான கடுமமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments